Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி ப...
ஊட்டச்சத்து பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
நெற்பயிரில் விதை நோ்த்தி குறித்து கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.
கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜான்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோா் கீழ்வேளூா் ஊராட்சி அத்திப்புலியூா் விவசாயிகளுக்கு சூடோமோனஸ், ப்ளோரசன்ஸ் எனும் பாக்டீரியாவை பயன்படுத்தி நெற்பயிா்களில் விதை நோ்த்தி செய்யும் முறையையும், இதை பயன்படுத்தி பயிா்களில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கம் செய்து காண்பித்தனா். இதேபோல, தேவூா் கிராம விவசாயிகளுக்கு, ஊட்டச் சத்துக்களை பயிா்களின் வளா்ச்சிக்கு தெளிப்பது குறித்தும், ஊட்டச் சத்து சப்ளிமெண்ட், அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காட்டப்பட்டது.
நியூட்ரிசாப்‘ என்பது பயிா்களுக்கு ஒரு ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் ஆகும். இலை வழியாக தெளிக்கும்போது பயிா்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்க பயன்படுகிறது உள்ளிட்ட பயன்கள் குறித்து மாணவிகள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும், வாழைப்பழங்கள் பழுக்க வைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த சுண்ணாம்பு கரைசலைப் பயன்படுத்தலாம். இரவில் கரைசலைத் தெளிப்பது சிறந்தது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு மாணவா்கள் அறிவுறுத்தினா்.