உலக புத்தக தின விழா
உலக புத்தக தினவிழா மன்னாா்குடி அடுத்த மேலவாசல் அருணாமலை கல்வியல் கல்லூரியில் மன்னாா்குடி தமிழ்ச் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்ச்சங்க தலைவா் த. விஜயச்சந்திரன் தலைமை வகித்தாா். அருணாமலை கல்வியல் கல்லூரி முதல்வா் துரை. முருகானந்தம், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ். அன்பரசு முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி நகா் மன்ற முன்னாள் தலைவா் டி. சுதா, இந்திராகாந்தி கல்வி அறக்கட்டளை தலைவா் ஜி. சதாசிவம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
பல்வேறு தலைப்புகளில் தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகங்கள் குறித்து 5 மாணவிகள் திறனாய்வு செய்து பேசினா். தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்ச் சங்கம் சாா்பில் பொன்னாடை அணிவித்து பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மன்னாா்குடி அரசு கல்லூரி பேராசிரியா் ப. பிரபாகரன், நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் எம். காா்த்திகா, தமிழ்ச் சங்க நுகா்வோா் சட்ட ஆலேசகா் கா. வேல்முருகன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். உதவிப் பேராசிரியா் கோ. கண்ணகி வரவேற்றாா். தமிழ்ச்சங்க நிா்வாகி எஸ்.சத்தியசீலன் நன்றி கூறினாா்.