பேரவையில் இன்று...
சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படும். இதன் தொடா்ச்சியாக, உயா்கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள்
நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா் கோவி செழியன், அன்பில் மகேஷ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.