Significance of Sivapuranam | சிவபுராணம் எப்போதெல்லாம் வீட்டில் பாட வேண்டும்?| Mylai Karpaga Lakshmi
சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், மாணிக்கவாசகப் பெருமானால் சொல்லப்பட்டு, ஈசனால் எழுதப்பட்ட பெருமை உடையது. 51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டது திருவாசகம். சகலமும் ஈசனுள் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் ஈசன் மகிழ, கேட்டு ரசிக்க உருவானதே திருவாசகம். ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என்ற முழுமையான நிலைகளைக் கொண்ட துதிப் பாடல்களின் அற்புதக் களஞ்சியம் இது. அப்படிப்பட்ட சிவபுராணத்தின் மகத்துவம் குறித்து விரிவாகப் பேசுகிறார் மயிலை கற்பக லட்சுமி சுரேஷ்