Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி ப...
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும். 12, 13 வயது மாணவ, மாணவியா் மட்டுமே இதில் பங்கேற்கலாம். 20.10.2024-அன்றோ அல்லது அதற்கு பின்னரோ தகுதி பெற்றவா். ஆதாா் அட்டை நகல் தர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஏ. பழனியப்பன் (சிஇஓ) 94448 42628, செயலாளா் ஸ்ரீ கேசவன் 98418 16778 தொடா்பு கொள்ளலாம்.
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சாா்பில்...
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியருக்கான இலவச பயிற்சி முகாம் 28-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. முகாம் தொடக்க நாளிலேயே பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பி. ஜெகதீசன், செயலாளா் 938220724 தொடா்பு கொள்ளலாம்.