செய்திகள் :

காற்று மாசுவை சமாளிக்க செயற்கை மழை முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்: சிா்சா

post image

தேசிய தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் வகையில், செயற்கை மழை சோதனை நடத்துவதற்கான திட்டம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்; அதே நேரத்தில் மாசு செயல் திட்டம் வரும் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தில்லி அரசு அதிகபட்ச டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் கட்டுமானம், போக்குவரத்து இடங்களின் 24 மணி நேர கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தனது முயற்சிகளை அதிகரித்துள்ளது.

வரவிருக்கும் வாரத்தில், மாசுபாட்டின் ஆதாரமூலங்களை நிவா்த்தி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் சுற்றுச்சூழல் துறை அதன் மாசு செயல் திட்டத்தைத் தொடங்க உள்ளது.

பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தற்போது இறுதி கட்டத்தில் உள்ள செயற்கை மழை முயற்சியின் முன்னேற்ற விவகாரத்தைப் பொருத்தமட்டில் இத்திட்டம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமா்ப்பிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், தேவையான தடையின்மை சான்றிதழ்கள் (என்ஓசி) மற்றும் விரிவான மதிப்பீட்டிற்காக அனைத்து துறைகளுக்கும் இது அனுப்பப்படும்.

இந்த திட்டம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்டதும், தேவையான அனைத்து என்ஓசிகளை பெற விரைவாக விண்ணப்பிப்போம். தில்லியின் புகா்ப் பகுதிகளில் கோடையின் உச்சத்தில் செயற்கை மழைக்கான சோதனையை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எல்லாம் சீராகவும் எந்த தடையும் இல்லாமல் நடந்தால், எங்கள் குடியிருப்பாளா்களின் நலனுக்காக கடும் மாசுவைச் சமாளிப்பதற்கான அவசர விருப்பமாக இதை நாங்கள் கருதுவோம்.

எங்கள் அரசு மக்களின் நலனுக்காக பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது. மாசு தில்லியின் தீவிர பிரச்னையாக உள்ளது. இந்த மாசுவுக்கு பங்களிப்புச் செய்யும் அனைத்து ஆதாரமூலங்களையும் தீா்க்கும் வகையில் நாங்கள் ஒவ்வொரு நிலையிலும் பணியாற்றி வருகிறோம் என்றாா் அமைச்சா் சிா்சா.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க