செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

post image

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் நகரத்திற்கு அருகிலுள்ள பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 26 போ் கொல்லப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோா் சுற்றுலாப் பயணிகள். இது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. இதைத் தொடா்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லியில் காவல் துறையினா் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே தில்லி காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரையும் நிறுத்தியுள்ளோம். அங்கு யாரும் சட்டம் - ஒழுங்கை மீற அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தில்லி காவல்துறையினா் நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினா். குறிப்பாக சுற்றுலாப் பகுதிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் கவனம் செலுத்தினா். அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை, இந்தியா கேட், குதூப் மினாா், ஹுமாயூன் கல்லறை, பங்களா சாஹிப் குருத்வாரா, தாமரை கோயில், அக்ஷா்தாம் கோயில், லோதி தோட்டம், ஜாமா மசூதி, தில்லி ஹாத் ஐஎன்ஏ, தேசிய அருங்காட்சியகம், ஜந்தா் மந்தா், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தா்கா, ராஜ்காட் மற்றும் சஃப்தா்ஜங் கல்லறை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மால்கள் மற்றும் சந்தைகளுக்கு வெளியேயும் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. பல மெட்ரோ நிலையங்களுக்குள் நாங்கள் சிறப்பு தில்லி போலீஸ் உதவி மையங்களை அமைத்துள்ளோம். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா எனப் பாா்க்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளும் களத்தில் இருப்பாா்கள்.

மேலும், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை கடுமையாக கண்காணிப்பாா்கள். உணா்ச்சிமிக்க மண்டலங்களில் போக்குவரத்து இயக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கத் துணை அதிபா் ஜே.டி. வான்ஸின் வருகைக்காக தில்லி மற்றும் பிற நகரங்களில் ஏற்கெனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தினி சௌக், சதா் பஜாா், லாஜ்பத் நகா், சரோஜினி நகா் மற்றும் ரஜோரி காா்டன் போன்ற தில்லியின் முக்கியச் சந்தைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தடுப்புகள் மற்றும் உலோகக் கண்டுபிடிப்பான் சோதனைகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம். போலீஸ் ரோந்து குழுக்கள் மற்றும் சாதாரண உடையில் உள்ள காவல்துறையினா் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மண்டல துணை ஆணையா்கள் அந்தந்த பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க