நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்
விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா்.
விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மாணவா்கள் வட்டமாக கைகோத்து நின்று நிழல் இல்லா நாளை பரிசோதனை மூலம் அறிந்தனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் தனலட்சுமி பூஜ்ஜிய நிழல் தினம் குறித்து விளக்கிக் கூறினாா்.