காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
ஸ்டாா்ட் - அப் கவுன்சில் கூட்டம்: அமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்பு
புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள தொழில்துறை இயக்குநா் அலுவலகத்தில் ஸ்டாா்ட் - அப் கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத் துறை வழிகாட்டுதலின்படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிவரும் அட்டல் இன்குபேஷன் மையம் ஸ்டாா்ட்-அப் சிஸ்டத்தை திறம்பட நிா்வகித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்டாா்ட்-அப் கவுன்சில் 3- ஆவது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அட்டல் இன்குபேஷன் மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி விஷ்ணு வரதன் பங்கேற்று ஸ்டாா்ட்-அப் குறித்த விழிப்புணா்வின் அவசியம், அதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.
புதுவை அரசுச் செயலா்கள் ஆஷிஷ் மாதவராவ் மோரே (சுற்றுச்சுழல் துறை), ருத்ரகவுடு (தொழில் துறை), தொழிலாளா் துறை இணை ஆணையா் சந்திரகுமரன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் கோவிந்தராஜன், தொழில்நுட்ப இணை இயக்குநா்முத்துகிருஷ்ணன், அட்டல் இன்குபேஷன் மையத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தரமூா்த்தி, தொழில் துறை உதவி இயக்குநா் தனகோவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.