Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆயுள் தண்டனை கைதியாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடி நாகேந்திரன் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டாா்.
வேலூா் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி, அவருக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடா்ந்து சிறையில் அதிகாரிகள் ரெளடி நாகேந்திரனை ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.