தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா் வேலூா் மாவட்டம் பனமடங்கி புதுமனை தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு (68) என்பதும், கட்டட தொழிலாளியான இவா் வேலைக்கு செல்ல லத்தேரி ரயில் நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.