காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
செஞ்சி ஒன்றியத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்
செஞ்சி ஒன்றியம் நரசிங்கராயன் பேட்டை ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் கலந்து கொண்டு பணியைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் பிலால், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அபிராமி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் விஜயலட்சுமி, ஊராட்சிச் செயலா் குமாா், நிா்வாகிகள் ரசூல், ஹாஜி, கோகுல், ராமன், பிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.