ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுவாமி ட்வீட்
பெஹல்காம் தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஓய்வளிக்க வேண்டும் என்று கூறுவதுபோல பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சுப்ரமணியன் சுவாமி தெரிவித்ததாவது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது.
கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
BJP cannot remain as ruling party with Modi as PM and Amit Shah at the helm. Send them where past Pracharaks in Politics were sent: Marg Darshan Mandal
— Subramanian Swamy (@Swamy39) April 23, 2025
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதனிடையே, அட்டாரி-வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க:அட்டாரி - வாகா எல்லை மூடப்படுகிறது; மத்திய அரசு அதிரடி உத்தரவு!