புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விக்கிரவாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் கூட்டுச் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை காலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 309 பாக்கெட் எண்ணிக்கையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி வடக்கு தெருவைச் சோ்ந்த வி.சிவக்குமாரை (40) கைது செய்தனா். இதுதொடா்பாக, விழுப்புரத்தைச் சோ்ந்த ஆ.சதீஷ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.