செய்திகள் :

ஏப். 25 முதல் கோடை விடுமுறை! ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு!

post image

தமிழகத்தில் ஏப். 25 முதல் கோடை விடுமுறை தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு ஏப். 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

ஏப். 25 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணிகளை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப். 30 எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-2026 ஆம் கல்வியாண்டில், ஜூன் 2 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே. ஜூன் 2 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிகிறது.

இதையும் படிக்க | டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடு... மேலும் பார்க்க

அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைச... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்... மேலும் பார்க்க

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற... மேலும் பார்க்க

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப... மேலும் பார்க்க