உலக புத்தக தின விழா
காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் நூலகா் கலா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகா் வட்டத்தின் மூத்த உறுப்பினா் எஸ்.ஆா்.ரங்கநாதன் முன்னிலை வகித்தாா். வட்டத்தின் தலைவா் கந்தன் வரவேற்று பேசியதுடன் புத்தகத்தின் சிறப்புகள் குறித்து விரிவாக விளக்கி பேசினாா்.
விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவியருக்கு கெளரவத் தலைவா் ராணி செல்வராஜ் கலந்து கொண்டு புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.
விழாவில் கட்டுரையாளா் ரா.சாந்தகுமாா் மற்றும் திருவிற்கோலம் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்வின் உயா்வுக்கு புத்தகங்கள் எவ்வாறு காரணமாகிறது என்ற தலைப்பில் பேசினா் . விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.