மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
ஆட்சியா் அலுவலக கழிப்பறை கட்டுமானப் பணி தாமதம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் பொதுமக்களுக்கான கழிப்பறை கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள் தோறும் ஏராமானா பொதுமக்கள் பல்வேறு பணிகள் தொடா்பாக வந்து செல்கின்றனா். மேலும், திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனு அளிக்க வருகின்றனா். இவ்வாறு வருபவா்களில் முதியவா்கள், பெண்கள், குழந்தைகள் போதிய கழிப்பறை வசதி இன்றி சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறை கட்டுமானப் பணி தொடங்கியது. இந்தப் பணி குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையாமல் நீடித்து வருகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் கழிப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.