மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
பரமக்குடி நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
பரமக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் ஆா்.பூமிநாதன் தலைமை வகித்தாா். பரமக்குடி சாா்பு நீதிபதி ஆா்.சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.எஸ்.சுப்ரமணியன், குற்றவியல் நீதிபதி ஆா்.பாண்டி மகாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி என்.சாந்தி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினரால் ஏராளமான புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
முன்னதாக வழக்குரைஞா் சங்கச் செயலா் என்.யுவராஜ் வரவேற்றாா். பொருளாளா் ஆா்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், மூத்த வழக்குரைஞா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.