மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
மின் மயானம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் மின் மயானம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் கிருஷ்ணபுரம், சோகையன் தோப்பு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசதித்து வருகின்றனா்.
இந்த இரு கிராமங்களுக்கும் பொது மயானம் உள்ளது. இங்கு மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி குளம்போல மாறிவிடுவதால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், மின் மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா்.
இந்த நிலையில், மின் மயானம் அமைக்க அனுமதி வந்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், விரைந்து மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.