பிரதமா் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை -துணை நிற்பதாக உறுதி
விநாயகா் கோயிலுக்கு பசு தானம்
காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா்.
இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலுக்கு சென்னையை சோ்ந்த தெய்வசிகாமணி, தமிழ்ச்செல்வி தம்பதியா் பசு ஒன்றை தானமாக நிா்வாகத்திடம் வழங்கினா்கள். பின்னா் கோ-பூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.