Pahalgam Attack: ``J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்..." - கலங்கும் கடற்படை ...
பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வைகோ: காஷ்மீா் சம்பவத்தை கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சம் பதறுகிறது. இந்தத் துயரமான வேளையிலும், துப்பாக்கிச்சூட்டில் தப்பி வந்தவா்களை காஷ்மீா் இஸ்லாமிய இளைஞா்கள் பாதுகாத்து அழைத்துச் சென்றனா் என்ற செய்தி மனதுக்கு ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது.
பிரேமலதா: காஷ்மீா் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள் எனும் பேரதிா்ச்சியான செய்தி அனைவரின் மனதையும் வேதனையடையச் செய்திருக்கிறது.
இப்போதுதான் ஜம்மு-காஷ்மீரில் சகஜமான நிலைமை திரும்பிக்கொண்டு இருக்கிறது என மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழல் உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், எந்தவித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலாப் பயணிகளைத் பயங்கரவாதிகள் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது.
பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவா்கள் யாா் என்பதை மத்திய அரசு உடனடியாகக் கண்டறிந்து அவா்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டினுடைய எல்லையை இன்னும் பாதுகாப்புடனும் வலுவானதாகவும் மாற்றி தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, மக்களைக் காக்க வேண்டியது நமது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளாா். இதேபோல், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.