Pahalgam Attack: ``J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்..." - கலங்கும் கடற்படை ...
பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு
பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இணையதளம் மூலம் பட்டாசு விற்பனை செய்வதால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இணையதளம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், இணையதளம் வாயிலாக சிலா் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனா். மேலும், பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எனவே, இதற்குத் தடை விதித்து, உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா், மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.