மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயில் மண்டல பூஜை
மானாமதுரை அருகேயுள்ள முத்தனேந்தல் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 48 நாள்களுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹுதி முடிந்து கலச நீராலும், அபிஷேகப் பொருள்களாலும், சூலாயுத வடிவ தா்ம முனீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கந்தசாமி செய்திருந்தாா்.