மாணிக்கநாச்சியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக பல்வேறு மண்டகப்படிகளுக்குச் செல்வாா். 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
9-ஆம் நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு கோயில் அருகே கூடிய திரளான பக்தா்கள் பால்குடம் சுமந்து ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். தெற்குப்பட்டு மூலஸ்தானத்துக்கு பக்தா்களால் கொண்ட செல்லப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்நது, தெற்குபட்டு மூலஸ்தானத்திலிருந்து திருத்தோ் சப்பரத்தில் அம்மன் கோயில் வந்தடைந்தாா்.
விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இரவு பூப்பல்லாக்கில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவில் சுற்றுப்புரக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.