கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நாளை தொடக்கம்
சிவகங்கையில் கால்பந்து கழகம் சாா்பில், இலவச கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது.
இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலா் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை:
கால்பந்துக் கழகம் சாா்பில் 20 -ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த கோடைகால கால்பந்து பயிற்சி முகாமில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு இலவச வண்ணச் சீருடையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 86752 16868 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.