Love You: ஹீரோ, ஹீரோயின், இசை அனைத்தும் AI தான்; வெளியாகும் கன்னட படம்! - பட்ஜெட...
பிரதமா் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை -துணை நிற்பதாக உறுதி
காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் கண்டனத்தைத் தெரிவித்த அவா், இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தாா்.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரதமா் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தாா். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடா்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் பிரதமா் மோடியிடம் டிரம்ப் கூறினாா்’ என்ற பதிவிட்டுள்ளாா்.