Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த...
சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!
தற்போதைய உலகில் தொழில், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் செயல் நுண்ணறிவின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், காணொலி மூலம் நடத்தப்படும் தேர்வுகள், நேர்காணல்கள், விற்பனை அழைப்புகளில் செயல் நுண்ணறிவு மூலம் பதிலளிக்க சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உதவியளித்து வருகின்றன. தேர்வுகள், வேலைக்கான நேர்காணல்களிலோ விற்பனை அழைப்புகளிலோ (Sales Calls) எதிர்ப்புறம் இருப்பவர்களின் கேள்விகளுக்கு அல்லது உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முதல் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது வரையில் இந்த நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.
அவற்றில் சில நிறுவனங்கள், ஆள்மாறாட்டத்துக்கும் உதவுகின்றன. தங்களின் வேலைக்காகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு வேறொருவரை பதிலளிக்கச் செய்வதும் ஒருவகையில் குற்றமே.
அந்த வகையில், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இவ்வாறு உதவியளிப்பதன் மூலம் 5.3 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆள்மாறாட்டம் போன்ற செயல் சரியல்ல என்று விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும், வருவாய் வந்துகொண்டுதான் இருக்கிறது என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கூறுகிறார்.
ஒருபுறம் செயல் நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்தாலும், மறுபுறம் மனிதர்களின் அறிவுத்திறனையும் மழுங்கச் செய்வது என்பதோ மறுக்கப்படாத உண்மைதான்.
இதையும் படிக்க:பெஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி