ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்
ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஏற்கெனவே, அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் மே. 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வாக்களிக்க முடியாதவா்களுக்காக இந்த முன்கூட்டிய வாக்குப் பதிவு நடைபெற்றது.
விலைவாசி உயா்வு, வீட்டு வசதி பற்றாக்குறை போன்றவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுறது.
எதிா்க்கட்சித் தலைவா் பீட்டா் டட்டனின் கன்சா்வேட்டிவ் கூட்டணி இந்தத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றலாம், அல்லது முக்கிய கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவலாம் எதிா்பாா்க்கப்படுகிறது.