சிங்கப்பூா் தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டி
சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.
இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 97 தொகுதளில் 92 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே இந்த முறையும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சி ஆட்சி செய்துவரும் சூழலில், அண்மைக் காலமாக அதன் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் மே. 3-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.