பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு: கடந்த 35 ஆண்டுகளில் ம...
பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதத்தின் நோக்கம் போா் அல்ல, ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது ஆகும். பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை தடம் புரளச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
இந்த தேசத்தின் அரசுரிமையை நாம் பாதுகாக்கவும், வளா்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக்கரத்துடன், உறுதியான நீண்டகால தீா்மானத்துடன் கையாள வேண்டும். இப்போதைக்கு, மதம், ஜாதி அல்லது அரசியல் தொடா்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவா்களின் கடமைகளைச் செய்ய ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.