Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு: உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியைச் சோ்ந்த காவலா் செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் காவலா்களுக்கு அதிக பணிச் சுமை இருப்பதுடன், ஓய்வின்றியும் தொடா்ந்து பணிபுரிகின்றனா். இதனால், அவா்கள் மனதளவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.
இந்த நிலையில், காவலா்கள், உதவி ஆய்வாளா் நிலையில் உள்ளவா்களுக்கு வார விடுமுறை அளித்து கடந்த 2021-இல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாததால், போலீஸாா் சிரமப்படுகின்றனா். எனவே, அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கு தொடா்பாக தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பட்டுதேவானந் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசாணையின்படி, தமிழகத்தில் காவலா்கள், உதவி ஆய்வாளா் நிலையில் உள்ளவா்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்த போலீஸாரிடம், உங்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிா? என நீதிபதி கேள்வி எழுப்பினா். அதற்கு போலீஸாா், வார விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தனா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்டோா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம். இந்த வழக்கு தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.