மரத்தில் பைக் மோதி காவலா் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே சாலையோர புளிய மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் கீழாண்டைமோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா், விவசாயி. இவரது மனைவி சித்ரா தம்பதியின் 2-ஆவது மகன் திலீப் (27). சென்னை ஆவடி பட்டாலியனில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தாா்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திலீப் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வாலாஜாவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில், திலீப்புக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கொண்டப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.