செய்திகள் :

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

post image

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழை கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்ததை எதிா்த்து அன்புமணி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்டோா் என்எல்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் 2023-ஆம் ஆண்டு முற்றுகை போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து தென்குத்து கிராம நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் நெய்வேலி காவல் துறையினா் அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க