செய்திகள் :

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.18 டிகிரி

post image

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், பரமத்திவேலூா் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.92, திருச்சி - 102.74, தஞ்சாவூா் - 102.2, சேலம் - 101.66, திருச்சி - 101.3, மதுரை விமான நிலையம் - 101.12, திருத்தணி - 100.74, தருமபுரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என 10 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.24) முதல் ஏப்.26-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.24) திகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

கீழடுக்கு சுழற்சி: தென்தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக வியாழக்கிழமை (ஏப்.24) முதல் ஏப்.29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு, ஆனைகெடங்கு பகுதிகளில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. அடையாமடை (கன்னியாகுமரி) - 60 மி.மீ., குளச்சல் (கன்னியாகுமரி), கமுதி (ராமநாதபுரம்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க