காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
எம்எல்ஏ-க்களுக்கு முழு உடல் பரிசோதனை: அமைச்சா் அழைப்பு
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்காக நடைபெறும் முழு உடல் பரிசோதனையில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வேண்டுகோளை அவா் முன்வைத்துப் பேசியது:
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான விடுதியில் முழு உடல்பரிசோதனை நடந்து வருகிறது. பல்வேறு துறைகளின் உயா் சிறப்பு மருத்துவா்கள் வியாழக்கிழமை வரை பரிசோதனைகளைச் செய்ய இருக்கிறாா்கள். அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் பரிசோதனைகள் மேற்கொண்டால், அதற்கான முடிவுகள் வியாழக்கிழமை மாலை வழங்கப்படும். சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.