பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 1500க்கும் மேற்பட்டோர் கைது!
Pahalgam Attack: 'ஓர் அணியாக அந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்!' - ஹர்திக் பாண்ட்யா
'இன்றைய ஐ.பி.எல் போட்டி!'
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்பான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் பஹல்காம் தாக்குதலைப் பற்றி பேசியிருக்கின்றனர்.

'பஹல்காம் பற்றி...'
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியா மொத்தத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் இந்தச் சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பான டாஸில் இரு அணிகளின் கேப்டன்களான ஹர்திக் பாண்ட்யாவும் பேட் கம்மின்ஸூம் பஹல்காம் தாக்குதலைப் பற்றி பேசியிருக்கின்றனர்.
ஹர்திக் பேசுகையில், 'முதலில் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அணியாக நாங்கள் இதே மாதிரியான எந்த தாக்குதலையும் கடுமையாக கண்டிக்கிறோம்.' என்றார்.

பேட் கம்மின்ஸ் பேசுகையில், 'அந்தத் தாக்குதலைப் பற்றிய செய்திகள் எங்களின் இதயத்தையும் நொறுங்க செய்திருக்கிறது. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்கள்.' என்றார்.