Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக...
40 ஷாட்டுகள்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய பார்சிலோனா!
லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
லூயிஸ் கம்பெனிஸ் ஒலிம்பிக் திடலில் நடைபெற்ற இன்றைய (ஏப்.23) போட்டியில் பார்சிலோனா அணியும் மல்லோர்கா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி கோல் அடிக்க 40 முறை முயற்சித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் லா லீகா தொடரில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2011இல் ரியல் மாட்ரிட் சரகோசாவுடன் 40 ஷாட்டுகள் அடித்திருந்தது.
பார்சிலோனா அணி வீரர் டானி ஓல்மா இந்தப் போட்டியில் 46ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இந்தப் போட்டியில் மல்லோர்கா அணியின் கோல் கீப்பர் லியோ ரோமன் 12 முறை பந்தினை சேவ் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
90 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்த பார்சிலோனா ஆட்டத்தில் 78 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மல்லோர்கா அணி இலக்கை நோக்கி ஒருமுறைகூட பந்தினை அடிக்கவில்லை, மாறாக 4 ஷாட்டுகள் மட்டுமே அடித்தனர்.
இந்தப் போட்டியில் இறுதியில் 1-0 என பார்சிலோனா அணி வென்றது. பெட்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
40 - @FCBarcelona have attempted 40 total shots against Mallorca, equaling the record in a single @LaLiga match since at least 2003/04 (40 for @realmadrid against Zaragoza in 2011). Prolific. pic.twitter.com/4hDy1gNNgs
— OptaJose (@OptaJose) April 22, 2025
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய பார்சிலோனா கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறது.
பார்சிலோனா அணி 33 போட்டிகளில் 76 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்தத் தொடரில் மீதம் 5 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளதும் ரியல் மாட்ரிட் அணியின் ஃபார்ம் சுமாராக இருப்பதும் பார்சிலோனாவுக்கு சாதகாமாக இருக்கிறது.
லா லீகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 33 போட்டிகள் - 76 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 31 போட்டிகள் - 66 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 32 போட்டிகள் - 63 புள்ளிகள்
4. அத்லெடிகோ கிளப் - 32 போட்டிகள் - 57 புள்ளிகள்
5. வில்லாரியல் - 31 போட்டிகள் - 52 புள்ளிகள்
6. ரியல் பெட்டிஸ் - 32 போட்டிகள் - 51 புள்ளிகள்