செய்திகள் :

டூரிஸ்ட் ஃபேமிலி பட டிரைலரை வெளியிட்ட அட்லி!

post image

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவையுடன் பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது படத்தின் டிரைலரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தினை இயக்கவிருக்கிறார்.

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க

40 ஷாட்டுகள்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய பார்சிலோனா!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.லூயிஸ் கம்பெனிஸ் ஒலிம்பிக் திடலில் நடைபெற்ற இன்றைய (ஏப்.23) போட்டியில் பார்சிலோனா அணியும் மல்லோர்கா அணியும் மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

கணவன் - மனைவி இடையே இருக்கும் மனபொருத்தத்தைவிட சிலருக்கு உருவ கேலியே பெரிதாகத் தெரிகிறது என சின்ன திரை நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் ந... மேலும் பார்க்க

கோழைத்தனமான செயல்: பெஹல்காம் தாக்குதலுக்கு விஜய் தேவரகொண்டா ஆவேசம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா பெஹல்காம் தாக்குதல் குறித்து மிகவும் ஆவேஷமாக பேசியுள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஏ... மேலும் பார்க்க

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! பவித்ரா லட்சுமி வேண்டுகோள்

தனது உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தான், சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அதனால் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் இருப... மேலும் பார்க்க