Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக...
பெஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெஹல்காம் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவின் கிரீடமாகவும் மற்றும் இயற்கை அழகும் கொண்ட நகரில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புனிதத்தன்மைக்குமான அவமரியாதை. இதனை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மனசாட்சியற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல், அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மேலும், பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் காட்டுகிறது என்று கூறியது.
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அவர்களுடன் தேசம் என்றும் உடனிருக்கும் என்று இரங்கலும் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க:ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?