செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

post image

ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாதிகளின் இத்தகைய செயலுக்கு கூட்டாக கண்டனம் தெரிவிப்பதுடன், நீதி மற்றும் அமைதியை உறுதிசெய்யும் பாதையில் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் உள்பட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோன்று இந்தத் தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுவாமி ட்வீட்

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஓய்வளிக்க வேண்டும் என்று கூறுவதுபோல பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் 35 மக்கள், வீரர்கள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என இதுவரை 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக நேற்று பெஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு... மேலும் பார்க்க

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேறவ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு - காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்த... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ஆப்கன் அரசு கண்டனம்!

பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தா... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்., அழைப்பு

பெஹல்காம் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, தில்லி தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 24) காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உற... மேலும் பார்க்க