``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
அதிமுக தலைமையில்தான் கூட்டணி; வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி?
அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்திருப்பதாக கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது, கூட்டணி குறித்து கவலைப்படாமல், தேர்தல் பணிகளைச் செய்யுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது. திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.