செய்திகள் :

Pahalgam Attack: `எங்கள் அரசு செய்வதை நாங்கள் செய்வோம்’ - BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் எதிரொலியாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் மீது 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Pahalgam Attack
Pahalgam Attack

இத்தகைய கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள், பிரதமர், முதலமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் என பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத்தலைவரும், எம்.பி-யுமான ராஜீவ் சுக்லா, "பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். மேலும், இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எங்களின் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம்.

ராஜீவ் சுக்லா
ராஜீவ் சுக்லா

எங்கள் அரசின் நிலைப்பாட்டின்படி, பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவதில்லை. இனிமேலும் நாங்கள் விளையாடமாட்டோம். ஐ.சி.சி தொடர்கள் என்று வரும்போது மட்டும், ஐ.சி.சி-யால் நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐ.சி.சி-யும் அறிந்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும், அதில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையைச் செலுத்தும் வகையிலும் நேற்றைய ஐ.பி.எல் போட்டியில், மும்பை, ஹைதராபாத் வீரர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்

'மும்பையின் கம்பேக்!'சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்... மேலும் பார்க்க

Ishan Kishan :அவுட் கொடுக்கப்படாமல் வெளியேறிய இஷன் கிஷன்; பாராட்டிய ஹர்திக்; ட்விஸ்ட் என்ன தெரியுமா?

'இன்றைய போட்டி!'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வீரர் இஷன் கிஷன் அம்பயர் அவுட் கொடுக்காமல் அவரே வெள... மேலும் பார்க்க

IPL 2025: ருதுராஜ், சாம்பா, ஃபர்குசன்... சீசனை விட்டு வெளியேறிய வீரர்கள் யார் யார்?

IPL 2025 சீசன் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவதும் எதிர்பாராத தருணத்தில் வெளியேறுவதுமாக சினிமாவைத் தாண்டிய பரபரப்பு ஒவ்வொரு ... மேலும் பார்க்க

``திக்வேஷ் செய்தால் அபராதம், Kohli செய்தால் நியாயமா? BCCI இரட்டை வேடம்..'' - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் ஸ்பின்னரான திக்வேஷ் ரதி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, இதுவரை 9 போட்டிகளில் 9 விக... மேலும் பார்க்க

Tilak Varma: 'அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றியப் புரிதலே எனக்கு கிடையாது'- திலக் வர்மா ஓப்பன் டாக்

மும்பை அணி வீரர் திலக் வர்மா ஜியோ ஸ்டாருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய அவர், “கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மும்பை அணிக்காக விளையாடிய... மேலும் பார்க்க

Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்..." - MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும... மேலும் பார்க்க