ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ
21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 21ஆவது மாடியில் இருந்து 7 மாத ஆண்குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவத்தினையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவித்ததாவது, அடுக்குமாடிக் குடியிருப்பின் 21ஆவது மாடியில் திறந்த ஜன்னலின் கதவுகளை மூட முயன்றபோது, தாயின் தோளில் இருந்த 7 மாத ஆண்குழந்தை எதிர்பாராதவிதமாகத் தவறி, மேலிருந்து கீழே விழுந்தது.
இதனையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினர்.