சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி
கோவை: சென்னையில் இருந்து சுற்றுலா வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் ஆழியாறு அணையின் நீரில் மூழ்கி பலியாகினர்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தனியார் பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆழியாறு அணையின் வாய்க்கால் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, ஆழமான சேற்றுப் பகுதிக்கு சென்ற தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப், ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியாறு ஆற்றின் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்ததை பார்த்து மற்ற மாணவர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.