Arjun Tendulkar: ``இதைச் செய்தால் அடுத்த கெயில் அர்ஜுன் டெண்டுல்கர்தான்'' - யுவர...
போக்சோ வழக்கில் லஞ்சம்: விருத்தாசலம் ஆய்வாளர், தலைமைக் காவலர் இடைநீக்கம்!
விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய கடலூர் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் தலைமைக் காவலர் (எழுத்தர்) சிவசக்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.