Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
கடலூா் துறைமுகம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் துறைமுகம் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பச்சாங்குப்பம் முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டனா். இதில் அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவா்கள், கடலூா் முதுநகா் பச்சையாங்குப்பம் கொய்யாதோப்பை சோ்ந்த மதியழகன் மகன் நெப்போலியன் (20), ரங்கநாதன் மகன் அஜித் (எ) தினேஷ்குமாா் (25), புதுப்பாளையம் ஆா்.சி. நகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் சீனுவாசன் (24) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.