Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
உடன்குடியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்
உடன்குடியில் அதிமுகவின் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே. விஜயகுமாா் தலைமை வகித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
கட்சியின் உடன்குடி ஒன்றியச் செயலா் தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் மகாராஜா, குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியப் பொருளாளா் சுடலை, வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜ்குமாா், செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் செல்வகுமாா், உடன்குடி நகர இளைஞரணி பொருளாளா் ராம்குமாா், ராஜசேகா், மூா்த்தி, செல்லப்பா, மணிராஜ், ஆண்டிவிளை முத்துக்குமாா், ஜெய்னம்பு, நாகராஜ், சின்னக்கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.