பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் பங்கேற்று, இம்மாவட்டத்தில் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளின் 2ஆம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.
இதில், 110 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.