கந்தா்வகோட்டையில் ஆதாா் மையம் இன்று செயல்படும்
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதாா் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என வட்டாட்சியா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஏப்.7-ஆம் தேதி நாா்த்தாமலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் மையம் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளாா்.